Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
3.தமிழ் மொழிபெயர்ப்புக்கான தேவை எவ்வாறு ஏற்பட்டது?
இந்தியத் துணைக்கண்டத்தைப் பொருத்த வரையில் முஸ்லிம்களின் ஆட்சி முழுமையாகப் பரவியிருந்தது. அவர்கள் வருவாய்த்துறைக்கு வழங்கிய சொற்கள் மிகுதி. ஆட்சித்துறையும் சட்டத்துறையும் இன்றைய அமைப்புக்கு வடிவமைக்கப்பட்ட காலம் ஆங்கிலேயருக்கு உரியது. ஆங்கிலேயர் ஆட்சியிலேயே கல்வித் துறையில் புதிய புதிய தொழில்நுட்ப அறிவியல் துறைகள் வளர்ந்து தமிழகத்திலும் ஆங்கில வழியிலேயே புகுந்தன. அவற்றைப் புரிந்து கொள்ளத் தமிழக மாணவர்கள் கடுமையாக உணர்ந்து அல்லல் அடைந்தனர். அன்றைய தேர்வு முறையில் தேர்ச்சி அடைய முடியாமல் கலங்கினர். எனவே, கல்வித்துறை, ஆட்சித்துறை ஆகியவற்றில் மொழிபெயர்ப்புத் தேவைப்பட்டது.