தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

  • 4 - விடை
    4
    மானிடப் பிறவியின் அருமையை வளையாபதி எங்ஙனம் எடுத்துரைக்கிறது?

    உயிர்கள் பல்வேறுபட்ட தீவினைகளின் ஆற்றலால் பல்வேறுபட்ட உடம்புகளை உடையனவாகின்றன. மிகவும் பலவாகிய பிறப்புகளில் புகுந்து அந்தந்தப் பிறப்புகளில் எல்லாம் துயரம் எய்துகின்றன. அப்படிப்பட்ட உயிர்கள் மக்கள் பிறப்பில் பிறத்தல் மிகவும் அரியதொரு செயலாகும். அப்படியே மக்கட்பிறப்பில் பிறந்தாலும் அப்பிறப்பில் இனிய பொருள்களை நுகர்தற்கு இன்றியமையாததாய் வருகின்ற செல்வமும் பெறுதற்கு அரிதாகும். தவம் செய்தாலன்றி மக்கட் பிறவியும் செல்வமும் கிடைக்கவாய்ப்பில்லை.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:50:18(இந்திய நேரம்)