Primary tabs
-
6 - விடை6
பெருங்கதையின் ஆசிரியர் யார்? யாரைப் பற்றிய கதை அது? அதன் மூலநூல்கள் யாவை?
பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர். வத்ச நாட்டு அதிபதியும் கௌசாம்பி என்ற நகரத்தில் அமர்ந்து ஆட்சி செய்தவனுமான உதயணன் பற்றிய கதையைக் கூறுவது.
கொங்குவேள் மாக்கதையென்றும் உதயணன் கதையென்றும் வழங்கும் இப்பெருங்கதைக்கு முதல் நூலாக குணாட்டியர் பைசாச மொழியில் எழுதிய பிருகத் கதையைச் சொல்வார்கள். கி.பி. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டில் துர்விநீதன் என்னும் கங்க மன்னன் பிருகத் கதையை வடமொழியில் செய்தானென்றும் அதன் வழிநூலே கொங்குவேளிரின் பெருங்கதையென்றும் வழங்குவர்.