தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.4 தொகுப்புரை

    நண்பர்களே! எங்கெல்லாம் தேடுவதோ செய்திகளை? என்ற வினாவிற்கு விடை கிடைத்தது போல், செய்தி மூலங்கள், செய்திக் களங்கள், செய்தி நிறுவனங்கள் பற்றி அறிந்து கொண்டீர்கள். அவற்றை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது நன்மை பயக்கும்.

    •
    செய்தி நிறுவனங்கள் என்றால் என்ன? அவற்றின் பணிகள் என்னவென்பது தெளிவாகத் தெரிந்து கொள்ளப்பட்டது.
    •
    இந்தியாவின் செய்தி நிறுவனங்கள் எத்தனை? அவையாவை என்று அறிய முடிந்தது.
    •
    அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்களில் முக்கியமானவை எவை என்று அறிய முடிந்தது.
    •
    செய்தித்தாள்கள் செய்தி நிறுவனங்களிலிருந்து எவ்வாறு செய்திகளைப் பெறுகின்றன என்ற வினாவிற்கு விளக்கம் பெற முடிந்தது.
    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    செய்தி நிறுவனங்கள் என்றால் என்ன?

    2.

    இந்திய நாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களைக் கூறுக?

    3.

    அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் யாவை? அவற்றின் பணிகள் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)