Primary tabs
-
3.4 அசை நிலை
அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்
சொல்லோடும் வினைச் சொல்லோடும் சேர்த்துச்
சொல்லப்படுவது. பொருள் இல்லாததாக வரும் சொல்
அசைச்சொல். பேச்சுத்தொடரில் இடம்பெறும் அசைநிலையை
உரையசை என்பர்.ஏ, ஓ என்பன அசைநிலையாகவும் வரும் என முன்பு
எடுத்துக்காட்டுடன் கண்டோம். ஏனைய அசைநிலை இடைச்
சொற்களை இங்குக் காணலாம். (உரையசை கட்டுரையில்
வரும் அசைநிலை. கட்டுரை - பேச்சு)
3.4.1 அசைநிலை இடைச்சொற்கள்
அசைநிலை
இடைச்சொல்எடுத்துக்காட்டுமன்“அதுமன் கொண்கன்தேரே”மற்று“மற்றுஎன்னை ஆள்க”கொல்“கற்றதனால் ஆய பயன்என்கொல்”அந்தில்“அந்தில்கழலினன் கச்சினன்”ஆங்கு“ஆங்கத்திறனால்”அம்ம“அது மற்றம்ம” (பேச்சில் வரும் அசைநிலை
- உரையசை)மா“உப்பின்று புற்கை உண்கமா
கொற்கையோனே” (மா என்னும் அசைச்சொல்
வியங்கோளை அடுத்து வருவது. உப்பின்றிச்
சோறு உண்க என்பது பொருள்)தான்நீதான் வர வேண்டும்.
மேற்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளிலும் இடைச்
சொற்கள் வேறு பொருள் இன்றி அசைநிலையாக வருவதை
உணரலாம்.
3.4.2 முன்னிலை அசைச்சொற்கள்
சில அசைச் சொற்கள் முன்னிலை இடத்தில் வருபவை.
மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள,
ஈ, யாழ என்னும் பத்து இடைச்சொற்களும் முன்னிலை
இடத்து வரும்.எடுத்துக்காட்டு
கேண்மியா
கேண்மோ
கேண்மதி
கேள் என்று பொருள்இவை எல்லாம் பழைய வழக்கு; இக்காலத்தே இவை வழக்கு
ஒழிந்தன. எனினும் இலக்கியங்களில் காணலாம்.
3.4.3எல்லா இடத்திலும் (தன்மை, முன்னிலை,
படர்க்கை) வரும் அசைச் சொற்கள்
யா, கா, பிற, பிறக்கு, போ, சின், போலும், இருந்து,
இட்டு, தாம், தான், போன்ற பல அசைச்சொற்கள்
மூவிடங்களிலும் வரும்.எடுத்துக்காட்டு
போலும் “மகிழ்ந்தனை போலும்”
இருந்து “எழுந்திருந்தேன்”
தாம் “நீர்தாம்”
பயில்முறைப் பயிற்சி
கீழ்க்காணும் தொடர்களில் ஏகார ஓகார இடைச்சொற்கள்
என்ன பொருளில் வந்துள்ளன என்பதைக் கண்டறியுங்கள்.இவனே வென்றான்படிக்கவோ வந்தாய்உம் என்னும் இடைச்சொல், அவன் வந்தாலும் வருவான்,
என்ற தொடரில் என்ன பொருளைச் சுட்டி நிற்கிறது என்பதை
உங்களால் அறிய முடிகிறதா?‘பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்’என்னும் இந்தத் திருக்குறளில் என - என்னும் இடைச்சொல்
இருக்கிறது. இந்த என எந்தெந்தச் சொல்லோடு எல்லாம்
சென்று சேரும்?கொல் என்னும் இடைச்சொல் அசைநிலையாக வந்துள்ள
திருக்குறளைச் சொல்ல முடியுமா என்று முயற்சி செய்யுங்கள்.