தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021233-இசைநிறை

  • 3.3 இசை நிறை

    இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது
    செய்யுளில் ஓசையை நிறைத்து (முழுமையாக்கி) நிற்பது,
    இசைநிறைக்கும் இடைச் சொற்களாக ஏ, ஒடு, தெய்ய -
    ஆகியன குறிக்கப்படுகின்றன.

    ஏகார இடைச் சொல் ஆறு பொருளில் வரும் என்பதை
    முன்னரே கண்டோம். அவற்றில் ஒன்று இசைநிறை
    என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

    எடுத்துக்காட்டு

             ‘எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே
                                (நன் - 58)


    • ஒடு - இசைநிறைத்தல்

    ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை
    நிறைக்க வந்துள்ளது.

    எடுத்துக்காட்டு

    ‘விதைக்குறு வட்டில் போதொடு பொதுள’

    விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன்
    பொருள். இங்கு ஒடு என்பது வேறு பொருள் தராது
    இசைநிறைத்தது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    தத்தம் பொருளை உணர்த்தி வரும் இடைச்
    சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும்?
    2.
    ஏகார இடைச் சொல் என்னென்ன பொருள்களில்
    வரும்?
    3.
    ஓஓ கெட்டேன் - இத்தொடரில் அமைந்துள்ள
    இடைச்சொல் எது? அது என்ன பொருளைத்
    தருகிறது?
    4.
    என, என்று - இடைச் சொற்கள் எத்தனைப்
    பொருள்களில் வரும்? அவையாவை?
    5.
    எல்லாரும் வந்தார் - இதில் உம்மை என்ன
    பொருளில் வந்துள்ளது?
    6.
    வினாப் பொருளைத் தரும் இடைச்சொற்கள்
    யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:59:46(இந்திய நேரம்)