Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1)தருமனைப் பார்த்து வீமன் கோபங்கொண்டது எதனால்?
பணயப் பொருளாகச் சூதாட்டத்தில் தன்னையும், தம்பியரையும் பாஞ்சாலியையும் தோற்றதற்குக் கோபங்கொண்டான் வீமன். சூதாடும் இடங்களிலே அடிமை ஏவல் செய்யும் தொண்டு மகளிர்கள் உண்டு. ஆனால் அங்கே கூடச் சூதாட்டத்தில் பணயப் பொருளாக எந்த அடிமைப் பெண்ணையும் வைப்பதில்லை எனக் கூறிக் கோபமடைந்தான்.