Primary tabs
-
3.6 புராண வகை
புராணங்களை (1) கடவுளர் பற்றிய புராணங்கள், (2) தல புராணங்கள், (3) பெரியார் புராணங்கள் என மூன்று வகைப்படுத்தலாம்.
3.6.1 கடவுளர் பற்றிய புராணங்கள்
கந்த புராணத்தை இவ்வகையிலும் சேர்க்கலாம்.
· கூர்ம புராணம்
இது திருமாலின் கூர்ம அவதாரத்தைப் பற்றியது.
அதிவீரராம பாண்டியர் பாடியது. இவர் இலிங்க புராணம், நைடதம் ஆகியவற்றின் ஆசிரியர். இப்புராணம் இரு காண்டங்களையும் 97 அத்தியாயங்களையும் 3717 பாடல்களையும் கொண்டது. கி.பி. 16ஆம் நூற்றாண்டு.3.6.2 தல புராணங்கள்
உமாபதி சிவம் என்பவர் பதினான்காம் நூற்றாண்டில் தில்லையைப் பற்றி, கோயில் புராணம் எனும் தலபுராணம் பாடினார். தலபுராண வகையில் தனித்துவம் கண்ட தமிழ்ப் புலவர்கள் தல புராணங்களைப் படைக்கத் தொடங்கினர். அதில் சிறப்பான தல புராணம் பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடற் புராணம்.பெரும்ப
ற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணமும் உண்டு.
· திருவிளையாடல் புராணம்ஆசிரியர் பரஞ்சோதியார். சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் நூல் இது.
இந்நூல் மதுரைக் காண்டம், கூடல் காண்டம்,திரு ஆலவாய்க் காண்டம் என்று மூன்று காண்டங்களாகவும் 65 படலங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. 3363 பாடல்களை உடையது.
· திருத்தணிகைப் புராணம்
ஆசிரியர்
-கச்சியப்ப முனிவர்பாடப்பட்ட தலம்
-திருத்தணிகை.கடவுள்
-முருகன்.உட்பிரிவு-19 படலங்கள், 3161 பாடல்கள்.
காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு.· திருக்குற்றாலத் தலபுராணம்
ஆசிரியர்
-
திரிகூடராசப்ப கவிராயர்பாடப்பட்ட தலம்
-
திருக்குற்றாலம்கடவுள்
-
திருக்குற்றால நாதர்உட்பிரிவு-
இரு காண்டங்கள், 34 சருக்கங்கள்,
2138 பாடல்கள்,· புலவர்களும் தல புராணங்களும்
புலவர்தல புராணப் பெயர்
(1)நிரம்பய அழகிய தேசிகர்-திருப்பரங்கிரிப் புராணம்,
சேது புராணம்(2)அதிவீரராம பாண்டியர்
-காசிக் காண்டம்
(காசித் தல புராணம்)(3)சிவப்பிரகாசர்-திருக்கூவப் புராணம்(4)வீரராகவ முதலியார்-திருக்கழுக்குன்றப் புராணம்(5)சைவ எல்லப்ப நாவலர்-திருவண்ணாமலைத் தல
புராணம்(6)ஞானப் பிரகாசர்-திருவொற்றியூர்த் தல
புராணம்(7)ஞானக் கூத்தர்-திருவாரூர் தலபுராணம்
(8)திருமலை நாதர்-சிதம்பர புராணம்(9)மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை-மாயூரத் தலபுராணம்
முதலிய 22 புராணங்கள்· தலபுராணங்கள் வரவேற்புப் பெறாமை
(1)மும்மூர்த்திகளில் ஒருவரோ, இந்திரனோ வணங்கிய கோயில்
என்ற கற்பனை எல்லாப் புராணங்களிலும் வரத்தொடங்கியது.(2)எண்ணற்ற புராணக் கதைகளைப் புரிந்து கொள்ள இயலாத
சூழல்.(3)ஒரே மாதிரியான அமைப்பு(4)வீடு பேறு தரும் என்ற நம்பிக்கைஇவற்றால் தல புராணங்கள் வரவேற்பைப் பெறவில்லை.
3.6.3 அடியார் புராணம்
சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணத்தை அடியார் புராணம் என்னும் வகைக்குள்ளும் சேர்க்கலாம்.· திருவாதவூரடிகள் புராணம்
இயற்றியவர் கடவுள் மா முனிவர். மாணிக்கவாசகரின் வரலாறு பற்றிய நூல் இது. காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு.ஏழு சருக்கங்களையும், 546 பாடல்களையும் கொண்டது.
சேக்கிழார் சுவாமிகளின் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் சேக்கிழார் சுவாமிகள் புராணமாகப் படைத்துள்ளார்.
· அரிச்சந்திர புராணம்
வடமொழி மகாபாரதத்திலும், பாகவதத்திலும் வேத வியாசர் எழுதிய ஸ்காந்த புராணத்திலும் இடம் பெற்றுள்ள அரிச்சந்திரன் கதையைத் தமிழில் நல்லூர் வீரை ஆசுகவிராயர் அரிச்சந்திர புராணமாகத் தந்துள்ளார்.இதற்கு மூல நூல்கள்
(1) வடமொழி அரிச்சந்திர புராணம்,
(2) அரிச்சந்திர வெண்பா. காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.10 காண்டங்களையும், 1215 பாடல்களையும் கொண்டது. “எந்தச் சூழ்நிலையிலும் உண்மையே பேசவேண்டும்” என உணர்த்துகிறது.
· ஸ்ரீ புராணம்
இப்புராணம் உரைநடையில் அமைந்தது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் இது அமைந்துள்ளது. சமணர்களின் புனித நூல் இது.63 புனிதர் வரலாறு. 12 சக்ரவர்த்திகள், 9 வாசுதேவர்கள், 9 பிரதிவாசு தேவர்கள், 9 பலதேவர்கள் போன்ற புகழ்மிக்க 63 பேர் வரலாற்றினை இந்நூல் தருகின்றது.
மேருமந்தர புராணம், சாந்தி புராணம், மாபுராணம் ஆகியன குறிப்பிடத்தக்க சமண சமயப் புராணங்கள் ஆகும்.
· இக்கால முயற்சிகள்
20 ஆம் நூற்றாண்டிலும் புராண வகையில் நூல் அமைக்கும் முயற்சி தொடர்ந்தது. அசலாம்பிகை அம்மையார் காந்தியடிகளிடம் பேரன்பு பூண்டவர் ; சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவர் காந்தி புராணம், திலகர் புராணம் என இரு நூல்களை இயற்றினார். புலவர் குழந்தை இராவணனைப் புகழ்ந்து இராவண காவியம் இயற்றியிருக்கிறார். இவ்வாறு இதிகாசம், புராணம் என்னும் இரு வகை இலக்கியங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே, புராண வகைமை தொடக்கத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் ஓர் இலக்கிய வகைமை .