Primary tabs
-
3.7 தொகுப்புரை
சங்க இலக்கியம் தனிப்பாடல்களின் தொகுதியாக அமைந்துள்ளதை அறிவோம். சிலப்பதிகாரம் தொடங்கி, கதைத் தொடர்போடு காப்பியங்கள் வெளிவந்தன. சமயத் தொடர்புடையனவாகிய இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை வடமொழியின் சார்பால் தமிழுக்கு வந்தன. அவை, தமிழ்நாட்டு இலக்கிய மரபுகளுக்கேற்ப மொழி மாற்றம் செய்யப்பட்டன. பல்வேறு காலப் பகுதிகளில் பல புலவர்கள் இக்கதைகளைத் தமிழ் நூல்களாக அமைத்தனர். வடமொழிப் புராண இலக்கியத்தையொட்டி, தமிழ்நாட்டில் உருவான இலக்கிய வகை தலபுராணம் ஆகும். இந்த வகை தமிழுக்கே உரியது எனலாம். இடைக்காலத்தில் தொடங்கிய இந்தப் புராண வகைமை இன்று வரை தொடர்ந்து வருகிறது எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II