|  44. 
 பிடியேற்றியது
 
 | 
 
 |  இதன்கண்: நகரத்தே தோன்றிய 
 பூசலாலும் சூறைக்காற்றா லும் நீர்விழாவின்கண் கூடியிருந்த மன்னனும், மக்களும் வருந்து 
 தலும், மன்னன் வாசவதத்தையைப் பாதுகாக்கும்படி சொல்லி விடுத்த செய்தியைத் 
 தலைக்கீடாகக் கொண்டு உதயணகுமரன் வாசவத்தையப் பற்றிப் பிடியின் மிசையேற்றுதலும், 
 அவளைக் கைக்கொண்டு தன்னூர்க்குப் புறப்படுதலும் பிறவும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | எரிதலைக் கொண்டாங்கு எயிலம் 
 எரியப் புறமதில் சேரிப் பூசலும் 
 ஆர்ப்பும்
 உறுநிர்ப் பெருங்கடல் உவாஉற் 
 றாஅங்கு
 ஆகுலம் பெருகலின் அருந்துறை 
 தோறும்
 5   போகாது 
 ஆடுநர் புன்கண் 
 எய்தி
 மேகலை விரீஇய தூசுவிசி 
 அல்குல்
 நீருடை களைதல் செல்லார் 
 கலங்கிக்
 கான்இரி மயிலின் கவின்பெற 
 இயலி
 அயிலிடு நெடுங்கண் அரும்பனி உறைத்தர
 10    உயிர்ஏர் கணவரைத் தானை 
 பற்றி
 நல்லது 
 தீதென்று அறியாது 
 அவ்வழிச்
 செல்வது பொருளோ செப்பீ 
 ரோஎன்ற
 அல்லல் கூர அலமரு வோரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாக்குருக் கத்தியொடு மல்லிகை மணந்த 15    பூப்பெரும் பந்தர் நூல்திரை 
 வளைஇய
 கால்பெரு மாடம் காற்றொடு 
 துளங்க
 விண்ணுலகு பெறினும் விடுத்தற்கு 
 ஆகாப்
 பண்ணியல் பாணி நுண்ணிசை 
 ஓர்வார்
 ஊரக வரைப்பிண் ஒல்லென 
 எழுந்ததோர்
 20    
 பூசலுண்டு எனலும் பொறைஉயர் 
 மாமலை
 வேய்உயர் பிறங்கல் சேயுயர்ந்து 
 ஓடும்
 சூருறு மஞ்ஞையின் சோர்ந்த 
 கூந்தலர்
 புதல்வரை யொழிந்துயாம் போந்தன மேதுஎன
 அதிவனர் நடுங்கி 
 அழலின் உயிர்த்துத்
 25    திதலை 
 னவ்வயிஅறு அங்கையின் 
 அதுக்கி
 உதிர்பூங் கொம்பின் ஒடுங்கு வோரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | குட்டம் 
 ஆடிக் குளிர்ந்த 
 வருத்தம் அட்டுப்பத 
 மாக அறிந்தோர் 
 அமைத்த
 மட்டுமகழ்ந்து உண்ணும் மாந்தர் 
 அவ்வழிப்
 30    
 பட்டது என்னெனப் பசும்பொனின் 
 இயன்ற
 வட்ட வள்ளம் விட்டுஎறிந்து 
 விதும்பி
 எழுந்த கம்பற்கு இயைந்துசெல் 
 வோரை
 அழிந்தது இல்லை அறிந்தோம் 
 யாமென
 மொழிந்துஇடை விலங்கி முன்நிற் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 35    கம்மப் 
 பல்கலம் விம்மப் 
 பெய்த பொறியமை பேழையொடு பூந்துகில் 
 தழீஇக்
 குறிவயின் நின்ற குறள்வயின் 
 நோக்கார்
 சோரும் கூந்தலர் வாரும் 
 கண்ணினர்
 ஆரும் துன்பமொடு ஊர்வயின் 
 நோக்கி
 40    வீழ்பூங் 
 கொடியின் விரைந்துசெல் வோரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பழிப்பின்று 
 புனைந்த பட்டுஅணைப் 
 படுகால் கழிப்பட மாடம் காலொடு 
 துளங்க
 விழிப்பில் மேனிதம் இன்னுயிர் 
 விடுமென
 வேகப் புள்ளின் வெவ்விசை 
 கேட்ட
 45    நாக மகளிரின் 
 நடுங்கு வோரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஓடுவிசை 
 வெங்காற்று உருமொடு 
 ஊர்தரப் பாடல் தண்ணுமைப் பாணியில் 
 பிழையாது
 ஆடல் மகளிர் அரங்கம் 
 புல்லெனச்
 சுவைசோர்ந்து அழிய நவைகூர்ந்து 
 நடுங்கி
 50    மஞ்சிடைப் 
 புகூஉம் மகளிர் 
 போலத்தம்
 கஞ்சிகை எழினியில் கரந்துநிற் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நடுங்கு வோரும் நவைஉறு 
 வோரும் ஒடுங்கு வோரும் ஒல்கு 
 வோரும்
 இனையர் ஆகத்தம் புனைநலம் 
 புல்என
 55    நங்கையும் 
 சேயள்நம் இறைவனும் 
 நண்ணான்
 என்கொல் ஈண்டுநம் இன்னுயிர்த் 
 துணையென
 மங்கையர் எல்லாம் மம்மர் எய்தக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கணிகை இரும்பிடி அணிநலம் 
 நசைஇயப் பிடியொடு போந்த பெருங்களிற்று ஒருத்தலை
 60    வீரிய இளையர் வாரியுள் 
 வளைஇ
 மதந்தலை நெருங்கி மதக்களிறு 
 வலியாக்
 கதந்தலை அழியக் கந்தொடு 
 ஆர்த்துச்
 சாம கீத ஓசையில் 
 தணிக்கும்
 நூல்அறி பாகரொடு மேலறிவு 
 கொள்ளாது
 65    
 இகழ்ச்சியின் விட்ட இறைவன் போல
 மகிழ்ச்சி எய்தி மணிமுடி 
 வேந்தன்
 வத்தவர் இறைவனை விட்டனன் 
 உழிதரல்
 நீதி அன்று நெறியுணர் 
 வோர்க்குஎன
 ஒதியல் ஆளர் உடலுநர் உழிதரப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 70    பௌவம் 
 எல்லாம் படரும் 
 ஈண்டெனக் கௌவை வேந்தனுங் காற்றொலிம் 
 அஞ்சி
 யானையின் அருஞ்சிறை வளைஇ 
 அதனுள்நம்
 சேனையும் உரிமையும் செறிக 
 வந்தெனப்
 பிறிதில் தீரா நெறியினன் ஆகக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 75    காற்றொடு 
 கலந்த கார்முழக்கு 
 இன்னிசை மாற்றுக்களிற்று எதிர்வென மறித்தன 
 மயங்கி
 அந்தப் போதிகை இடைபரிந்து 
 அழியக்
 கந்துமுதல் கிழித்துக் காரென 
 உரறி
 மேலியன் முறைவர் நூலியல் ஓசை
 80    எஃகெறிந்து என்ன வெஃகறு 
 செவிய
 அடக்கவும் அடங்காப் புதுக்கோள் 
 யானை
 வால்வளை மகளிரொடு மைந்தரை 
 உழக்கி
 ஏர்இருங் குலிகப் புனல்பரந்து 
 இழிதரும்
 காரிருங் குன்றின் கவின்பெறத் தோன்றக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 85    கொன்னே 
 சிதைந்து கோவின் 
 குறிப்புடன் நகரி முழக்கினும் மிகையெழு 
 தீயினும்
 அளவில் ஆர்ப்பினும் அருந்தளை 
 பரிந்து
 கடலென அதிர்ந்து காரெனத் 
 தோன்றி
 விடலரும் சீற்றமொடு வேறுபட 
 நோக்கிக்
 90    களமெனக் 
 கருதிக் கனன்ற 
 உள்ளமொடு
 நளகிரிக் கூற்றம் நகரம் 
 உழக்க
 எதிர்எழு வோரை அதிர 
 நூறி
 வத்தவர் கோமான் வயவர் 
 திரிதர
 எத்திசை மருங்கினும் உட்குவரத் தோன்றிய
 95    இன்னாக் காலை ஒன்னா மன்னனும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தன்ஆண் 
 தொழில்துணிவு எண்ணும் 
 ஆயினும் செறியக் கொள்ளும் செய்கை 
 ஓரான்
 அறியக் கூறிய வன்பினண் 
 அல்லதைத்
 தன்வயின் நின்றுதன் இன்னியம் 
 கொள்ளும்
 100   
  என்மகள் உள்வழி இளையரொடு 
 ஓடிக்
 காவல் இன்றுதன் கடன்எனக் 
 கூரி
 மத்தவன் மான்தேர் வத்தவற்கு உரையெனப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பாய்மான் றானைப் பரந்த 
 செல்வத்துக் கோமான் பணித்த குறைமற்று இதுவென
 105    ஏவல் இளையர் இசைத்த 
 மாற்றம்
 சேதியர் பெருமான் செவியில் 
 கேட்டு
 விசும்புமுதல் கலங்கி வீழினும் 
 வீழ்க
 கலங்க வேண்டா காவல்என் 
 கடன்எனக்
 காற்றிற்கு உலையாக் கடும்பிடி 
 கடைஇ
 110    ஆற்றுத்துறை 
 குறுகிய அண்ணலைக் கண்டே
 | உரை | 
 
 |  | 
 
 |  | காவல் 
 மாக்களும் காஞ்சுகி 
 முதியரும் ஏவல் இளையரும் எதிர்எழுந்து 
 ஓடி
 மாடமும் கடையும் மதில்புறச் 
 சேரியும்
 ஓடெரி கவரலின் ஊர்புகல் ஆகாது
 115    வையமும் சிவிகையும் கைபுனை 
 ஊர்தியும்
 காற்றுப்பொறி கலக்க வீற்றுவீற்று 
 ஆயின
 போக்கிடம் எங்கட்குப் புணர்க்கல் 
 ஆகாது
 ஆக்கிடம் எமக்கும்உண் டாக 
 அருளி
 ஆய்ந்த நல்யாழ்த் தீஞ்சுவை உணர்ந்தநின்
 120    மாணாக் கியையெம் மன்னவன் 
 அருளால்
 இரும்பிடி நின்னொடு ஒருங்குடன் 
 ஏற்றிக்
 கொடுக்குவ வேண்டும்என்று எடுத்துஎடுத்து 
 ஏத்தி
 அருந்திறல் காவலர் அச்சம் 
 எய்திப்
 பெருந்திறல் மன்னர்க்குப் பணிந்தனர் உரைப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | 125    எவ்வாய் அமரும் 
 இன்மொழிக் கிளவி அவ்வாய் மங்கலம் ஆகென 
 விரும்பிக்
 கவ்வையும் பெருகிற்று உய்தலும் 
 அரிதே
 இவ்வழி மற்றிவள் நிற்றலும் 
 ஏதம்
 வருக ஈண்டென வத்தவன் வலிப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 130    தவாஅக் 
 காதலொடு தகையாழ் 
 காட்டும் உவாத்தி ஆதலின் உறுதியும் 
 அதுவெனச்
 செய்கையின் அறியாச் சிதைவிற் 
 றாகிக்
 கௌவை எரியும் காற்றினொடு 
 எழுந்தது
 அரிமான் அன்னநம் பெருமான் 
 சேரத்
 135    திருமா 
 நூதலியைத் தீதொடு 
 வாராது
 உதயண குமரன் ஒருபிடி 
 ஏற்றிப்
 போவது பொருளெனக் காவலர் இரப்பப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பெரியோர்க்கு உதவிய சிறுநன்று 
 எய்ப்பக் கரவாது பெருகிக் கைஇகந்து விளங்கும்
 140    உள்ளத்து உவகை தெள்ளிதின் 
 அடக்கி
 மதர்வை வண்டொடு சுரும்புமணந்து 
 ஆடும்
 குயில்பூங் கோதையொடு குழல்குரல் 
 வணரும்
 கயில்எருத் திறைஞ்சிக் கால்நிலம் 
 கிளைஇ
 உருகு நெஞ்சத்து உதயண குமரனைப்
 145    பருகும் வேட்கையள் பையுள் 
 கூர
 நிறையும் நாணும் நிரந்துமுன் 
 விலங்க
 நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்து 
 உரையா
 அஞ்சில் ஒதியை நெஞ்சு வலியுறப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பயிற்சி 
 நோக்கின் இயற்கையின் திரியாக் 150    காஞ்சன மாலை கையிசைந்து 
 ஒருங்கே
 ஏந்தினள் ஏற்ற இரும்பிடி 
 இரீஇ
 முடியா ஆள்வினை முடித்தனம் 
 இன்றென
 வடியேர் தடம்கண் வாளென 
 மிளிரும்
 கொடியேர் சாயலைக் குடங்கையில் தழீஇப்
 155    பிடியேற் றினன்ஆல் பெருந்தகை உவந்தென்.
 | உரை | 
 
 |  |