Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
2.‘குண்டலகேசி’ எனப் பெயர் பெற்றதன் காரணம் யாது?
‘கேசி’ என்ற சொல் பெண்ணின் கூந்தலைக் குறிக்கும். சுருண்ட கூந்தலை உடையவள் என்பதால் இக்காப்பியத் தலைவி ‘குண்டலகேசி’ எனப் பெயர் பெற்றாள். ‘பத்திரை’ என்ற இக்காப்பியத் தலைவி சமண சமயம் சார்ந்தபோது, அச்சமய வழக்கப்படி அவள் கூந்தல் மழிக்கப்பட்டது. ஆனால் அது உடனடியாகச் சுருண்டு வளர்ந்து விட்டது. எனவே தான் ‘பத்திரை’ குண்டலகேசியாகி, அவள் பெயரே காப்பியத்திற்கு அமைந்தது.