தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.
    நான்காம் வேற்றுமைப் பொருள்களைக் குறிப்பிடுக.

    நான்காம் வேற்றுமையின் பொருள் கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என ஏழு வகைகளில் வரும்.

    எ.டு

    பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் - கொடை
    யானைக்குப் பகை சிங்கம்
    - பகை
    சாத்தனாருக்கு நண்பர் இளங்கோ - நட்பு
    பெண்களுக்கு அழகு புன்னகை - தகுதி
    தாலிக்குப் பொன் வாங்கு - அதுவாதல்
    (பொன்னே தாலி ஆவதால்)
    கூலிக்கு வேலை செய்தான் - பொருட்டு
    தசரதனுக்கு மகன் இராமன் - முறை (உறவு)

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:51:46(இந்திய நேரம்)