தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.6 தொகுப்புரை

  • 5.6 தொகுப்புரை

    இப்பாடத்தில் முதல் வேற்றுமை முதல் நான்காம் வேற்றுமை வரையிலான வேற்றுமைகளின் பொருளை அறிந்து கொண்டோம்.

    பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை ஆகும். பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்பு வேற்றுமை உருபு எனப்படும்.

    வேற்றுமை எட்டு வகைப்படும். முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை), எட்டாம் வேற்றுமை (விளிவேற்றுமை) ஆகிய இரண்டு வேற்றுமைகளுக்கும் உருபுகள் இல்லை.

    இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகளுக்குத் தனித்தனியே உருபுகள் உண்டு. இந்த ஆறு வேற்றுமைகளும் அவற்றிற்கு உரிய  பொருள்களின் பெயரால் வழங்கப்படும்.

    முதல் வேற்றுமையின் உருபு மாற்றமில்லாத பெயர் ஆகும். இது, வினையையும், பெயரையும், வினாவையும் கொண்டு முடியும். இவற்றிற்குக் கருத்தாவாய் நிற்பதே இதன் பொருள் ஆகும்.

    இரண்டாம் வேற்றுமையின் உருபு ‘ஐ’ மட்டுமே. ‘ஐ’ உருபின் பொருள்கள் ஆறு.

    மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன. ஒடு, ஓடு என்னும் உருபுகள் தம்மையேற்ற பெயர்ப் பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும்.

    நான்காம் வேற்றுமையின் உருபு ‘கு’ மட்டுமே. இதற்குரிய பொருள்களை நோக்கும்போது ‘இதற்கு இது பொருள்’ என்பது போல வருவதால் நான்காம் வேற்றுமையின் பொருள் ‘ஏற்றுக் கொள்ளுதல்’ என்பர்.

    இப்பாடத்தின் வாயிலாக முதல் நான்கு வேற்றுமைகளையும் அவற்றின் பொருள்களையும், சொல்லுருபுகளையும் அறிந்து கொண்டோம்.

    1.

    மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் யாவை?

    2.
    மூன்றாம் வேற்றுமைப் பொருள்களைக் குறிப்பிடுக.
    3.
    நான்காம் வேற்றுமை உருபு யாது?
    4.
    நான்காம் வேற்றுமைப் பொருள்களைக் குறிப்பிடுக.
    5.
    மூன்றாம் வேற்றுமையில் வரும் சொல் உருபுகள் யாவை?
    6.
    கூலி வேலை - நான்காம் வேற்றுமைத் தொடராக்குக.
    7.
    துப்பாக்கி சுடு - மூன்றாம் வேற்றுமைத் தொடராக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 13:35:59(இந்திய நேரம்)