Primary tabs
-
3.0 பாட முன்னுரை
ஆங்கிலேயர் தமிழகத்தில் தங்களது ஆட்சியை நிலைநாட்டியவுடன் சீரியதொரு அரசாங்கத்தினை ஏற்படுத்தினர்.
விரிந்து பரந்து கிடந்த இந்தியா முழுவதிலும் தங்களது ஆட்சியை நிலைநாட்ட முயன்றனர். நாடுகளை ஒருங்கிணைக்க முற்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர். சட்டம் மற்றும் நீதித்துறையில் கவனம் செலுத்தினர். இந்திய நாட்டுடன் பிரிட்டிஷார் தவிர வேறு ஒருவரும் வாணிகத் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் முயன்றனர். இவை போன்ற காரணங்களால் தமிழகத்தில் ஆஙகிலேயர் ஆட்சியின்போது பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தன.