தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    இக்காலப் பகுதியில் இலக்கியம், இலக்கணம், உரைகள் என்ற அனைத்து நிலைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்பட்டது. சாத்திர நூல்கள் மற்றும் இலக்கண உரைகள் அதிகம் தோன்றியுள்ளன. ஒப்பு நோக்கும்போது, இக்காலப் பகுதியில் வைணவ இலக்கியங்களே அதிகம் தோன்றின எனலாம். பிரபந்த இலக்கியங்கள் சீரான நிலையில் காணப்பட்டன. சமண இலக்கியங்கள் வழக்கம் போல் தம் பங்களிப்பை இக்காலக் கட்டத்திலும் செலுத்தின. இக்காலப் பகுதியில் பௌத்த சமயம் தொடர்பான எவ்வித இலக்கியமோ, உரையோ எழவில்லை.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1)

    பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க வைணவ இலக்கியங்கள் யாவை?
    2)
    பின்பழகிய பெருமாள் ஜீயர் செய்த நூல்கள் யாவை?
    3)
    எந்த நூலின் விளக்கமாக அறநெறிச்சாரம் என்ற சமண நூலைக் கூறுவர்?
    4)
    பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 18:42:05(இந்திய நேரம்)