Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
நச்சினார்க்கினியரின் உரையில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் யாவை?
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, கலித்தொகை போன்றவை நச்சினார்க்கினியர் உரை எழுதிய நூல்கள் ஆகும். வடமொழி வழக்கு, உலக வழக்கு, சாதி சமய வழக்கு எனப் பலவற்றை அவர் இனங்காட்டுகிறார். சங்க நூல்கள் அனைத்திலிருந்தும் மேற்கோள் காட்டுகிறார். இவையே நச்சினார்க்கினியரின் உரையில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் எனலாம்.