தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    இலக்கியங்களில் பேசப்படும் கருத்துகளைக் காதல், சமயம், அரசியல், இயற்கை என்று பலவாறாகப் பிரித்துக் காண இயலும். இலக்கியங்களில் பேசப்படுவது எந்த உள்ளடக்கமாயினும் இலக்கியப் படைப்பாளி தான் நினைத்தவாறே அக்கருத்தைப் படிப்போரிடம் சென்று சேர்ப்பதற்கு உதவும் கருவி மொழி ஆகும். இக்கருவியாகிய மொழியும் கவனமாகத் திட்டமிட்டு இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தால்தான் அந்த இலக்கியம் படிப்பவர்களின் மனத்தில் நீங்காமல் இடம் பெற்றிருக்கும். எனவே இலக்கியம் வாயிலாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்திற்கு முக்கியக் கருவியாக மொழி அமைகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:11:37(இந்திய நேரம்)