தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.6 தொகுப்புரை

 • 2.6 தொகுப்புரை

  தமிழர், கலைகளில் பெரு விருப்பமுள்ளவர். இவர்களின் கலைப் பாணியைத் தமிழகக் கோபுரங்களில் காணலாம். இன்றும் தமிழகக் கலைகள் கோயில்களாலேயே பாதுகாக்கப்படுகின்றன. யானை போன்ற விலங்குகளை மயக்கும் ஆற்றல் தமிழ்ப் பெண்ணின் இசைக்கு இருந்தது. சிலப்பதிகாரம் ஓர் இசைக்களஞ்சியமாக அல்லவா திகழ்கின்றது!

  மாமல்லபுரத்தில் கல்யானை, மதுரையில் சிவபெருமான் ஆடற்கோலம், சித்தன்னவாசலில் அரசன் அரசி ஓவியம் ஆகியன எல்லாம் தமிழரின் சிறந்த கலை மாதிரிகள் அல்லவா? இவற்றைக் குறித்து இப்பாடத்தில் ஓரளவு தெரிந்து கொண்டீர்கள். தொடர்ந்து போகலாமா?


   

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1. கொல்லிப் பாவை பற்றிய செய்தியைக் கூறுக.

  2. தமிழகத்தின் பழமையான ஓவியங்கள் எவை?

  3. செங்கணான் கட்டிய கோயில்கள் எத்தனை?

  4. கோயில்களின் வகைகளைக் கூறுக.

  5. சிதைந்த நிலையில் உள்ள அரண்மனைகள் இன்று எங்குக் காணப்படுகின்றன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:46:45(இந்திய நேரம்)