Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
இதுவரை பயன்படுத்தாத தாற்றுமுள்ளைப் பயன்படுத்துமாறு தலைவன் பாகனை வேண்டுவது ஏன்?
மருதனிளநாகனார் பாடலில் வினைமுடித்துத் தலைவியைக் காணும் பெருவேட்கையுடன் திரும்பும் தலைவன், விரைந்து தேரைச் செலுத்துமாறு பாகனிடம் கூறும்போது, தீண்டா வைமுள் தீண்டி........ ஏமதிவலவ என்கிறான். குதிரையைச் செலுத்தத் தாற்றுமுள்ளைப் பயன்படுத்துவதைத் தலைவனோ பாகனோ விரும்பியதில்லை. எனினும் இப்போது அதனைப் பயன்படுத்துமாறு தலைவன் பாகனைத் தூண்டுவதன் காரணம், தலைவியை மிக விரைவில் சந்திக்கவேண்டும் என்ற பெருவேட்கை தான்.