Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
பொழுது மறுத்து உண்ணும் தலைவி பாராட்டப்படுவது ஏன்?
செல்வக் குடும்பத்தில் அருமையாக வளர்க்கப்பட்ட தலைவி, திருமணமானபின், தலைவனின் குடும்பம் வறுமையுற்ற நிலையில் அச்சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு, ஒரு நேரம் விட்டு ஒருநேரம் உண்பவள் ஆகிறாள். இத்தகைய அவளது அறிவுமுதிர்ச்சியைத் தோழி முதலியோர் பாராட்டுகின்றனர்.