தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    புன்னை தலைவியின் தங்கையாக - உயர்திணைப் பொருளாகக் காட்டப்படுவதன் நோக்கம் என்ன?

    தலைவி, சிறுமிப் பருவத்தில் விளையாட்டாக நட்ட புன்னை விதை தானே முளைவிட, அதை அவள் அன்புடன் வளர்த்தாள். இந்த அன்புப் பிணைப்பைப் பார்த்த அன்னை தலைவியிடம், ‘இது உன் தங்கை’ என்று சொன்னாள். அப்போதே புன்னை தலைவியின் குடும்ப ‘உறுப்பினர்’ ஆகிவிட்டது. இதனைத் தோழி தலைவனுக்குச் சுட்டிக் காட்டுகிறாள். காரணம் ‘புன்னைத் தங்கை’க்கு அருகில் தலைவனைச் சந்திக்கத் தலைவி நாணுகிறாள் என்பதாகும். இதன் உட்கருத்து, தலைவியை விரைவில் தலைவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 15:49:37(இந்திய நேரம்)