தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    கொங்குதேர்வாழ்க்கை என்னும் குறுந்தொகைப் பாடல் தொடர்பான கதை யாது?

    இறையனாரின் இப்பாடல், சிவன் தருமிக்கு எழுதிக் கொடுத்ததாகவும், பாண்டியன் அவையில் தருமி படித்த அப்பாடலில் ‘பொருட்குற்றம் இருக்கிறது’ என நக்கீரர் பரிசு கொடுக்கவிடாமல் தடுத்ததாகவும், சிவனே தோன்றி நெற்றிக் கண்ணைக் காட்டியும் நக்கீரர் தம் கருத்தில் உறுதியாக நிற்கவே, சிவன் அவரை எரித்துப் பின் சாபவிடுதலை தந்ததாகவும் திருவிளையாடற் புராணத்தில் சொல்லப்படும் கதை மேற்குறித்த பாடலால் எழுந்தது. சிவன் நக்கீரர் வாதத்திற்குக் காரணம் பாடலில் ‘பெண்ணின் கூந்தல் நறுமணம் எந்தப் பூவிலும் இல்லை’ என்று சொல்லப்படும் கருத்தைச் சிவன் ஆதரித்ததும் நக்கீரர் எதிர்த்ததும் ஆகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 17:51:53(இந்திய நேரம்)