Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
ஆடிப்பாவையைப் பரத்தை யாருக்கு உவமையாக்குகிறாள்?
தலைவி, பரத்தையைப் புறம் பேசினாள். பரத்தை சினம் கொள்கிறாள். தலைவன், தலைவியை அடக்காமல் அவளுக்குப் பணிந்து நடப்பதே இந்நிலைமைக்குக் காரணம் என நினைக்கிறாள். அவள் சினம் தலைவன் மீது திரும்புகிறது. அவனது ‘அடிமைத்தனத்தை’ வெறுக்கும் பரத்தை ‘கண்ணாடியில் தெரியும் பிம்பம் கையும் காலும் தூக்க அதேபோல் காட்டும். அதுபோலத் தலைவன் தன் தலைவிக்கு ஏவல் செய்கிறான்’ என உவமையால் அவனை இகழ்கிறாள்.