Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
கபிலரின் பாடலில் வேர்ப்பலா - கிளைப்பலா ஆகியவற்றைக் கொண்டு தோழி உணர்த்துவது யாது?
தலைவியை விரைவாக மணந்துகொள்ள வேண்டும் எனத் தோழி தலைவனை வேண்டுவது பாடலின் நோக்கம். தலைவியின் தாங்க முடியாத துயர நிலையைத் தலைவனுக்கு புரிய வைப்பதற்காகத் தோழி பழத்தின் கனத்தால் முறியும் நிலையில் உள்ள பலாக்கிளையைச் சுட்டிக் காட்டுகிறாள். தலைவியின் நிலையைப் புரிந்து கொள்ளாதிருந்த தலைவனுக்கு அவனது நாட்டின் வேர்ப்பலாவையும் சுட்டிக் காட்டுகிறாள். கிளையின் வருத்தம் - தலைவியின் வருத்தம்; அது தலைவனுக்குப் புரிந்திருக்கவில்லை என்பதைத் தோழி அழகான வருணனை மூலம் புலப்படுத்துகிறாள்.