Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
கழற்றெதிர்மறை என்னும் துறையின் பொருள் கூறுக.
தலைவியை அடைய முடியாத ஏக்கத்தில் வருந்திப் புலம்பும் தலைவனைப் பாங்கன் கடிந்துரைப்பான். இதுவே கழறுதல் எனப்படும். தலைவன் அதனை மறுத்துத் தன் காதல் வேட்கையின் தன்மையை விளக்குவான். இதுவே கழற்றெதிர்மறை எனப்படும்.