Primary tabs
6.4 தொகுப்புரை
இப்பாடப் பகுதிப் பாடல்களில் காதலின் இன்பத்தை விடப் பிரிவின் வருத்தமும், தலைவன் விரைந்து மணந்து கொள்ளாததால் வரும் தவிப்பும், தலைவனின் ஒழுக்கக் கேட்டினால் தலைவிக்கு நேரும் அவலமும் எனக் காதலின் துயரப் பகுதிகளே நிறைந்து கிடப்பதைக் கண்டீர்கள். வாழ்வும் சாவும் எனும் இரு பெரும் உண்மைகளைக் காதலைக்கொண்டு இணைத்துப் பார்க்கும் பார்வைத் தீவிரத்தைக் கண்டீர்கள். அழகிய படிமங்கள் உங்கள் மனக்கண்ணில் தீட்டிய சித்திரங்கள் என்றும் வண்ணம் கலையாமல் நிலைத்திருக்கும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
2.
பிரிவின் துயரம் சாவை எல்லையாகக் கொண்டிருப்பதாக உணரும் தலைவி அதனை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?
4.
“ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” - இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம் யாது?