தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04112-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

        இப்பாடத்தில் எழுத்துகளின் வருகை (Distribution of phonemes) மாற்ற வரலாறு என்பதைப் பற்றி விளக்கப்படுகின்றது. சங்ககாலத்தின் தொடக்கத்தில் தோன்றிய தொல்காப்பியம் எழுத்துகளின் வருகை முறை பற்றிக் கூறியுள்ள விதிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்கள் அவ்விதிகளினின்று மாறுபட்டு அமைந்திருக்கும் பாங்கு சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகிறது. இடைக் காலத்திலும், தற்காலத்திலும் பிறமொழிச் செல்வாக்கினால் மெய்மயக்கங்களிலும், சொல்லின் இறுதி நிலை போன்ற இடங்களிலும் ஏற்பட்டுள்ள எழுத்து வருகை மாற்றங்கள் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:02:04(இந்திய நேரம்)