Primary tabs
-
2.1 எழுத்து வருகை என்றால் என்ன?
ஒலியன்களின் வருகை முறை பற்றிக் கூறுவது எழுத்து வருகை எனலாம். தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் ஓர் ஒலியனுக்கு ஓர் எழுத்தாக அமைக்கலாம். அவ்வாறு அமைந்து வரும் எழுத்துகள் சொல்லில் எந்த இடத்தைப் பற்றி வருகின்றன (முதல், இடை, கடை) என்றும் எவ்வெழுத்துகளுடன் சேர்ந்து உச்சரிக்கப்படுகின்றன என்றும் விளக்குவதை எழுத்து வருகை எனலாம்.