தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை சொற்பொருள் மாற்ற வகைகள் குறித்து, பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன கருத்துக்களையெல்லாம் தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து பார்க்கலாம்.

    • மொழியாய்வில் சொல் உணர்த்தும் பொருளில் ஏற்படும் மாற்றத்திற்கான பல்வேறு காரணங்களை விரிவாகத் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
    • மேலைநாட்டுச் சொற்பொருளியல் அறிஞரான உல்மன் அவர்கள் கூறும் சொற்பொருள் மாற்றத்தின் பலவகைகளை அறிந்து கொண்டீர்கள்.
    • பழமையான மொழியான நம் தமிழ்மொழியில் அமைந்துள்ள சொற்பொருள் மாற்றத்தின் பற்பல வகைகளையும், அவ்வாறு ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் பற்பல சான்றுகளின் மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    ‘கவலை’ என்னும் சொல் தரும் இருபொருளைக் குறிப்பிடுக.
    2.
    ‘இழவு’ என்ற சொல் உணர்த்தும் தற்காலப்பொருள் என்ன?
    3.
    மங்கல வழக்கு எனக் குறிப்பிடப்படுவது எது?
    4.
    ‘குட்டி’ என்ற சொல் எவ்வெவற்றின் இளமைப் பெயர்?
    5.
    உல்மனின் சொற்பொருள் மாற்ற வகைகளைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 17:31:36(இந்திய நேரம்)