தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருள் மாற்றத்திற்கான புறக் காரணங்கள்

  • 5.2 சொற்பொருள் மாற்றத்திற்கான புறக் காரணங்கள்

    பொதுவாக வரலாறு, உலகம், மனம், மொழி ஆகியவற்றிலான வேறுபாடுகளுடன் இணைத்துப் பார்க்கும்போது, சொற்பொருள் மாற்றத்திற்குப் பின்வருவனவும் காரணங்களாகலாம் என்பதை அறிய முடிகிறது.

    1. உலகில் ஏற்படும் மாற்றங்கள்

        ஆட்சி : அரசாட்சி, மக்களாட்சி

        அடுப்பு : கரி அடுப்பு, மின் அடுப்பு

    2. அறிவியல் கண்டுபிடிப்புகள்

        கதிர் : நெற்கதிர், கிரணம், எக்ஸ்ரே கதிர்

    3. சொற்களின் பொருள் பரப்பில் ஏற்படும் மாற்றங்கள்

        பள்ளி : கோயில், பள்ளிக்கூடம்

        வாக்கு : வார்த்தை, வாக்குச்சீட்டு

        நெய் : எண்ணெய், நெய்.

    4. மனித மனவுணர்வு மனப்பாங்கிலான மாற்றங்கள்

        நாற்றம் : நறுமணம், கெட்ட மணம்

    5. சொற்கடன் பேறு

        நட்சத்திரம் : விண்மீன், திரைப்பட நடிகை

        விசிறி : விசிறி, ரசிகன்/தொண்டன்

    6. மொழியலகுத் தொடர்களின் அலகு குறைப்பு

        பட்டை : மரப்பட்டை, சாராயம்

        காவல் : காத்தல், காவல்துறை

    7. தேர்ந்தெடுத்த விளக்கம்

        பாம்புராணி : அரணை, பாம்பின் ராணி

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்களில் இரண்டினைக் குறிப்பிடுக
    2.
    சொற்களின் பொருள் திரிவதற்கு எது காரணம்?
    3.
    சொற்பொருள் மாற்றத்தின் புறக் காரணங்களில் இரண்டினைச் சான்றுடன் தருக.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 17:28:16(இந்திய நேரம்)