Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
1.மொழித்திறன், இலக்கியத்திற்கு முக்கியமானது - எவ்வாறு?
இலக்கியத்திற்கு உருவம் தருவது, மொழி. அதனை முறையாகவும் திறன்படவும் கையாளுகிற போதுதான், சொல்லுகிற செய்தி, முறையாகவும் சிறப்பாகவும் வெளிப்படுகிறது. மொழியே சிந்தனையின் கருவி. மொழியை முறையற்றுக் கையாளுவது, முறையற்றுச் சிந்திப்பதாகவே முடியும். மொழித்திறன், இவ்வாறு முக்கியமானதாக உள்ளது.