தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திறனாய்வு வகைகள்

  • 1.1 திறனாய்வு வகைகள்

        திறனாய்வின்     வகைகள்     என்பவை,     திறனாய்வு செய்யப்படுவதற்குரிய வழிமுறைகள் இன்னின்ன என்பதன் அடிப்படையில்     அமைகின்றன.     உதாரணமாகப்     பல இலக்கியங்களிலிருந்து அவற்றின் சில பண்புகளைச் சாராம்சமான பண்புகளாகப் பிழிந்தெடுத்து அடையாளங் காட்டுவது ஒருவகை. குறிப்பிட்ட ஒரு கொள்கை, அல்லது ஒரு பண்பு நிலையை அளவுகோலாகக் கொண்டு அதனைப் பல இலக்கியங்களோடு பொருத்திப் பார்த்தல் என்பது இன்னொருவகை. அதாவது திறனாய்வு செய்வதற்குரிய வழிமுறை (Method) அல்லது செய்முறையைப் பேசுவது, திறனாய்வின் வகை என்று அறியப்படுகிறது.

        திறனாய்வின் வகைகள் பல. எனினும் அவற்றுள் மிக அடிப்படையானவை அல்லது முக்கியமானவை     என்பவை பின்வருமாறு:

        (1) பாராட்டுமுறைத் திறனாய்வு     (2) முடிபுமுறைத் திறனாய்வு     (3) விதிமுறைத் திறனாய்வு     (4) செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு     (5) விளக்கமுறைத் திறனாய்வு     (6) மதிப்பீட்டு முறைத் திறனாய்வு     (7) ஒப்பீட்டுத் திறனாய்வு     (8) பகுப்புமுறைத் திறனாய்வு

        இவற்றில் முதல் நான்கு திறனாய்வு வகைகளைப் பற்றி இப்பாடத்தில் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 13:34:51(இந்திய நேரம்)