தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 2)
    அறப்பளீசுர சதகத்தின் ஆசிரியர் பற்றி எழுதுக.

    அறப்பளீசுரச் சதகத்தின் ஆசிரியர் அம்பலவாணக் கவிராயர் என்பவர். இவர் சோழநாட்டிலே தில்லையாடி என்னும் ஊரிலே வளோளர் குலத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் இராம நாடகம், சீர்காழித் தலபுராணம் என்னும் அரியநூல்களை இயற்றிப் புகழ் பெற்ற அருணாசலக் கவிராயர் ஆவார். அவருடைய மூத்த மகன் இவர். இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவர் பல கலைகளையும் நன்கு கற்றவர் என்பது இந்நூலில் வரும் பாடல்களால் தெரிய வருகிறது. இவர் சிவபக்தி நிரம்பியவர் என்பதும் சைவ சமயப்பற்று மிக்கவர் என்பதும் இந்நூலில் வரும் பல பாடல்களால் அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 16:08:07(இந்திய நேரம்)