Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
3. வாயில் காவலன் கண்ணகியை எவ்வாறு சித்திரிக்கின்றான்?
பிடர்த் தலைப் பீடத்தின் மேல் நின்ற கொற்றவையும் அல்லள்; சப்த மாதர் ஏழு பேருள் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் அல்லள்; இறைவனை நடனமாடக் கண்டருளிய பத்திர காளியோ எனில் அவளும் அல்லள்; பாலை நிலக் கடவுளான காளியோ எனில் அவளும் அல்லள்; தாருகன் என்ற அசுரனை அழித்த துர்க்கையும் அல்லள்; உள்ளத்தில் மிகவும் சினங்கொண்டவள் போல் தோன்றுகின்றாள்; பொற்சிலம்பு ஒன்றினைக் கையிலே பிடித்துள்ளாள் என்று வாயில் காவலன் கண்ணகியைச் சித்திரிக்கின்றான்.