Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
6. விமலை பந்தாடுந் திறன் பற்றி எழுதுக.
விமலை ஒரே நேரத்தில் இரு கைகளிலும் ஐந்து பந்துகளை விடாமல் பந்தடிக்கும் திறனுடையவள். மேலே எழும்பியும், முறை தவறிக் கீழே விழுதலின்றியும் ஆடுகின்ற பந்து கையில் சேரும். ஒரு பந்து கையிலும், மற்றொன்று முகத்தின் முன்னேயும், பிறிதொன்று தலைக்கு மேலேயும், மார்புக்கு நேராகவும், கூந்தலுக்குப் பின்னாலும் சென்று வட்டமாக வரும்படி பந்தாடும் வல்லமை உடையவள்.