தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    புதுமைகள் பலதுறைகளில் பல்வேறு நிலைகளில் தோன்றிச் சமுதாய வளர்ச்சிக்கு உரமிட்டு வருகின்றன. அறிவுப் பரவல் என்பது சமுதாய மேம்பாட்டில் ஆணி வேருக்குச் சமமானது. வளர்ந்துவரும் நாடுகளில், குறிப்பாகப் பன்மொழி வழக்கு இருந்து வரும் நாடுகளில் பலமொழிகளிலும் பல்துறை அறிவு வேகமாகப் பரவி வருவதை நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். இத்தகு அதிவேக அறிவுப் பரவலுக்கு மொழி மிக முக்கிய ஊடகமாக விளங்குவதால் கலைச் சொல்லாக்கம் ஒரு தவிர்க்க இயலாத மூலகம் ஆகிறது. எனவே, ஒரு மொழியிலுள்ள தொழில்நுட்பச் சொற்கள் பிற மொழிகளில் மாற்றப்படுவது இன்றியமையாததாகின்றது. உலக நாடுகளில் ‘ஒரு மொழிப் பயன்பாடு’ அருகி வரும் இக்காலத்தில் மொழிபெயர்ப்பு ஒரு கலையாக, அறிவியல் துறையாக விசுவரூபம் எடுப்பது தவிர்க்க இயலாததே. இதுபோன்ற தகவல்கள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:32:03(இந்திய நேரம்)