Primary tabs
1.5 தொகுப்புரை
மொழிபெயர்த்தலின் பயனாக உரைநடை என்னும் வசன வளர்ச்சி, புதினம், நாடகம், சிறுகதை போன்ற இலக்கியத் துறைகள் பெருவழக்குற்றன. மொழிபெயர்ப்பின் அறிமுகம் என்ற இந்தப் பாடத்தில் மொழிபெயர்ப்பு ஒரு கலை என்பதும், அதன் தோற்றமும் வளர்ச்சியும், மொழிபெயர்ப்பின் தேவையும் மொழிபெயர்ப்பின் பயன்களும் குறிப்பாகப் பண்பாடு, இலக்கியம், அறிவியல், சமுதாயம், சமயம், அரசியல் போன்ற மேம்பாடுகளும் விளக்கப்பட்டன. தமிழ் மொழி பெயர்ப்பின் தொடக்கக் காலம், இடைக்காலம், ஐரோப்பியர் காலம் எனப்படும் தற்காலம் போன்ற காலப்பிரிவுகளின் செய்திகள் ஒரு பருந்துப்பார்வையாகத் தொகுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.