Primary tabs
-
5.0 பாட முன்னுரை
மொழிபெயர்ப்பு என்பது இந்த நவீன உலகில் மனித வள மேம்பாட்டுக்கு இன்றிமையாத துறையாக விளங்கும் ஒன்றாகும். அறிவியல், தொழில் நுட்பவியல், சமூகவியல், பொருளியல், அரசியல், கல்வியியல், இதழியல், கலையியல் போன்ற பல துறைகள் ஆலவிழுதெனப் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்றன. இயற்கைச் சூழலாலும், மொழியாலும், பண்பாட்டினாலும், நாகரிகத்தாலும், கண்டங்களாலும் உலக மக்கள் வேறுபட்டிருந்தாலும் புதியன தோன்றும்போது எல்லார்க்கும் எல்லாம் என்ற மக்கள் பொதுநிலை உருவாகி விடுகிறது. இந்த உலகு தழுவிய கொள்கையின் அமுலாக்கத்திற்கு அடிப்படைத் தேவை மொழிபெயர்ப்பு என்று சொன்னால் வியப்பு இல்லை.