தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • 5.4 மொழிபெயர்ப்புக் கொள்கையாளர்கள்

    மொழிபெயர்ப்புக் கொள்கைகள் என எவையேனும் உண்டா? பல மொழிபெயர்ப்பாளர்கள் தத்தம் சொந்தக் கொள்கைகளை உருவாக்கினர் அல்லது பின்பற்றினர். ஆனால், மொழிபெயர்ப்புக் கொள்கையாளர்கள் பல்வேறு கொள்கைகளைப் பகுப்பாய்வு செய்து மொழிபெயர்ப்புக் கொள்கைகளைத் திரட்டுவதாலும், தொகுப்பதாலும் மொழி பெயர்ப்பு முறைகளைத் தீர்மானிப்பதற்கான சிக்கலை அணுகுகிறார்கள். நாம் பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர் முன் மொழிந்துள்ள மொழிபெயர்ப்புக் கொள்கைகளைத் தொகுத்தும் பகுத்தும் கூர்ந்து ஆய்வது அவசியம். மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுத்தவர்களாக,

    (1) எட்டினி தோலட் - Etienne Dolet
    (2) மார்ட்டின் லூதர்கிங் - Martin Luther king
    (3) கேம்ப்பெல் - George Campbell
    (4) ஷிலர் மேக்கர் - Schlier Macker
    (5) கோத்தே - Goethe
    (6) புனித ஜெரோம் - St.Jerome
    (7) கேட் ஃபோர்டு - Catford
    (8) யூஜின் நைடா - Eugene Nida
    (9) பீட்டர் நியூமார்க் - Peter Newmark

    முதலியவர்களையும்,

    (1) நிதாதாபர் வேர்நிலைவிதி
    (2) நியூமார்க் வேர்நிலைவிதி

    என்னும் இரண்டு விதிகளையும், டாக்டர் வீ.சந்திரன் தனது மொழிபெயர்ப்பியல் கொள்கைகள் என்ற நூலில் சொல்லிச் செல்லுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:33:49(இந்திய நேரம்)