Primary tabs
-
4.6 தரப்படுத்துதல்
சொல்லாக்கத்தில் கருத்தியலுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஒரு கருத்தியலைக் குறிக்கப் பல சொற்கள் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் மரபினுக்கும் பொருளினுக்கும் ஏற்புடையன நிலைத்து நிற்கும்; பிற ஆக்கங்கள் மெல்ல வழக்கொழிந்து விடும். ஒரு பிறமொழிச் சொல்லுக்கு நிகராகப் பல சொற்கள் தமிழில் ஆக்கப்பட்டிருப்பினும் அவற்றில் ஒன்றைத் தரப்படுத்துதல் வேண்டும்.
எடுத்துக்காட்டு:
Computer-கம்பூட்டர்கணிப்பொறிகணிப்பான்கணிப்பிகணனிகணினிTelex-தொலை தட்டச்சுதொலை எழுதிதொலை வரிதொலை அச்சுதொலை நகல்தொலை நகலிஎன்று பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றில் ஒரு சொல்லைத் தரப்படுத்துவதன் மூலம் நிலைபேறாக்கம் அடையச்செய்ய முடியும்.
ஈஜின் ஊஸ்டர் சொல்லாக்கத்தில் தரப்படுத்துதலை மேற்கொள்வதற்குச் சில நெறிமுறைகளை உருவாக்கியுள்ளார். அவை பின்வருமாறு:
(1)பொருத்தமுடைமை(2)ஏற்புடைமை(3)சொற் சுருக்கம்/ எளிமை(4)ஒருமைப்பாடு(5)பல்துறை நோக்கு(6)மொழித் தூய்மைஒரு சொல்லுக்குத் தமிழில் வழங்கும் பல சொற்களிலிருந்து பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
Bibliography-துணை நூல்பட்டியல்நூல் பட்டியல்நூல் அட்டவணைநூலோதிநூலடைவுநூற்றொகைElectro Cardiograph-இதய மின்படக் கருவிஇதய மின் வரைபடக் கருவிஇதய மின்பட வரைவிஇங்கு நூற்றொகை என்ற சொல்லையும், இதய மின்பட வரைவி என்ற சொல்லையும் பொருத்தமானவையாகக் கருதித் தரப்படுத்தலாம்.
சொல்லாக்கத்தில் ஏற்கனவே பெரு வழக்கிலுள்ள செயற்பாட்டினை ஏற்றுக் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு:
Joint Family-கூட்டுக்குடும்பம்Joint account-கூட்டுக் கணக்குJoint action-கூட்டுச் செயல்Joint statement-கூட்டு அறிக்கைJoint Property-கூட்டுச் சொத்துInitial reflex-தொடக்க மறுவினைInitial pay-தொடக்க ஊதியம்Initial pressure-தொடக்க அழுத்தம்எனவே சொல்லாக்கத்தின் போது joint என்று வருமிடத்தில் எல்லாம் கூட்டு என்ற சொல்லையும் Initial என்று வருமிடத்தில் தொடக்க என்ற சொல்லையும் பயன்படுத்தலாம்.
4.6.3 சொற் சுருக்கமும் எளிமையும்
சொற்கள் உச்சரிப்பில் எளிமையானவையாகவும் கேட்பதற்கு இனிமையானவையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
நூல்நிலையம்>நூலகம்மின்சார வாரியம்>மின்வாரியம்சொல்லாக்கத்தில் தரப்படுத்தும்போது ஒருமைப்பாடு மிகவும் முக்கியம்.
Telephone-தொலைபேசிTelevision-தொலைக்காட்சிTelegram-தொலைவரிTelescope-தொலைநோக்கிஇங்கு Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்று தமிழாக்கப்பட்டு, அச்சொல் வரும் இடங்களில் அதே வடிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது சீர்மையைக் குறிக்கிறது.
துறையின் பயன்பாட்டினுக்கேற்பச் சொல்லாக்கம் மாறுபடுகின்றது.
Sub dialect-உட்கிளை மொழி (மொழியியல்)Sub Soil-அடிமண் (பொறியியல்)Sub Inspector-சார்பு ஆய்வாளர் (நிர்வாகம்)Sub conscious-ஆழ்மனம் (உளவியல்)Sub culture-மறுவளர்ப்பு (வேளாண்மை)இங்கு Sub என்ற சொல் ஒவ்வொரு துறையிலும் பயன்பாட்டு நெறிக்கேற்ப வெவ்வேறு பொருளினைத் தந்துள்ளது.
சொல்லாக்கத்தில் தொடக்க காலத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதச் சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இன்று தமிழின் சொற்களஞ்சியம் வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், எவ்லோருக்கும் புரியக் கூடிய எளிமையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
ரசாயனம்>வேதியியல்சர்வ கலாசாலை>பல்கலைக் கழகம்அபேட்சகர்>உறுப்பினர்கவர்னர்>ஆளுநர்டிரான்ஸ்போர்ட்>போக்குவரத்துவிவசாயம>வேளாண்மைபென்சன்>ஓய்வூதியம்டைரக்டர்>இயக்குநர்காரியதரிசி>செயலர்ஸ்திரி>பெண்புருஷன்>ஆண்சொல்லாக்க நெறிமுறைகள் வகுக்கும் போது இதுவரை வல்லுநர்கள் எதிர்கொண்ட சிக்கல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சிக்கல்களைக் களைந்திடவும் எதிர்காலத்தில் சொல்லாக்க நடைமுறையில் பிரச்சினைகள் தோன்றாமலிருக்கவும் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் வகுக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் சொல்லாக்க முயற்சியில் ஒத்த போக்கு நிலவும்.