Primary tabs
பாடம் - 1
P20241 இக்காலக் கிறித்தவக் கவிதைகளும்
வழிபாட்டுப் பாடல்களும்இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் இக்காலக் கிறித்தவ மரபுக் கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் அறிமுகப்படுத்துகிறது. கிறித்தவ வழிபாட்டில் இடம் பெற்றுள்ள பாடல்களையும் இந்தப் பாடம் அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால், இக்காலக் கிறித்தவக் கவிதைகளின் தன்மைகளையும் போக்குகளையும் அறிந்து கொள்ளலாம். பிற சமயக் கவிஞர்களும் இயேசுவிடம் ஈடுபாடு கொண்டு பாடியுள்ள சமய வேறுபாடற்ற பண்பினை அறிந்து கொள்ளலாம். மேலும், கிறித்தவ வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் பாடல்களின் வரலாறு, வகைகள், பண்புகள் போன்றவற்றையும் விளங்கிக் கொள்ள முடியும்.