தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இக்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்

 • பாடம் - 6

  P20246 இக்கால இஸ்லாமியத் தமிழ்
  இலக்கியங்கள்

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  இந்தப் பாடம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால வகையில் பாகுபாடு செய்து இக்கால இலக்கியங்களைத் தெளிவுபடுத்துகிறது. இக்கால இலக்கியங்களின் பிரிவுகள், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, உரையாசிரியர்கள், உரைநடை ஆசிரியர்கள் பற்றியும் கூறுகிறது. உரைநடையாசிரியர்கள் ஆற்றியுள்ள தமிழ்த்தொண்டைப் புலப்படுத்துகின்றது. இக்கால இஸ்லாமியக் கவிதை - உரைநடை இலக்கியங்கள் பற்றிப் பார்க்கும் போது, இஸ்லாமியப் படைப்பாளிகள் இஸ்லாமிய இலக்கியம் அல்லாத பொதுவான படைப்புகளைப் படைத்துள்ளமை கவனிக்கத்தக்கது. அது இப்பாடத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம் வெள்ளாட்டி மசலா என்பதையும் அவ்விலக்கியம் தோன்றிய சூழலையும் தெளிவுபடுத்துகின்றது.

   

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் குறைவற நுகரும் பேறு பெறலாம்.


  • தமிழிலக்கிய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட அருட்பா மருட்பாப் பூசல், விடுதலை வேள்வியில் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பங்களிப்பு போன்றவற்றை உணர்ந்து கொள்ளலாம்.


  • இஸ்லாமியப் படைப்பாளிகள் சமயத்திற்கும் அப்பாற்பட்ட பொதுக் கருத்துகளையும் படைப்பாக்கியுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். படைப்பாளிகள் பதிப்பாளர்களாகவும் இருந்து பல நூல்களை வெளியிட்டனர் என்பதை அறியலாம்.


  • இஸ்லாமிய இதழ்கள் பல தோன்றி வளர்ந்து வருவதை உணரலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 11:17:36(இந்திய நேரம்)