தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.6 தொகுப்புரை

    இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப் பெறுகிறது. இக்காலத்திலிருந்து கி.பி 1750ஆம் ஆண்டு வரையிலுமுள்ள காலத்தைத் தொடக்கக்காலம் என்றும் கி.பி 1850 வரையிலுமுள்ள காலத்தை இடைக்காலம் என்றும், அதற்குப் பின் இன்றைய நாள் வரையிலுமுள்ள காலத்தை இக்காலம் என்றும், கால வகையில், நோக்கிப் பாகுபாடு செய்வர். அவ்வாறே இக்காலத்தை ஐரோப்பியர் ஆட்சிக் காலம் அல்லது விடுதலை வேள்விக் காலம் என்றும் அடுத்துள்ள கால அளவை தன்னாட்சிக் காலம் அல்லது மறுமலர்ச்சிக் காலம் என்றும் வகுப்பர். இக்கால இஸ்லாமிய இலக்கியம் கவிதை வடிவிலும் உரைநடை வடிவிலும் அளவாலும் தரத்தாலும் சிறப்புற்று விளங்கி, மேலும் வளர்ந்து வருகிறது.

    1.

    இஸ்லாமிய எழுத்தாளர்களின் உரைநடைப் படைப்புகளை எத்தனை வகையாகப் பாகுபடுத்தலாம்? அவை யாவை?

    2.

    முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம் யாது? அதன் உள்ளடக்கம் யாது?

    3.

    தோப்பில் முகம்மது மீரானுடைய புதினங்களின் தனிச்சிறப்பைக் குறிப்பிடுக.

    4.

    இஸ்லாமிய உரைநடை எழுத்தாளர்களுள் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம்  பெறும் சிறப்பிடம் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 11:24:00(இந்திய நேரம்)