தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்

 • பாடம் - 5

  P20245 இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  இஸ்லாம் சமய மெய்ஞ்ஞான நெறியின் பெயரும் அதன்பொருள் விளக்கமும் அளிக்கிறது. இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியின் அடிப்படைத் தத்துவத்தை விளக்குகின்றது. இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி தரும் பேறுகளைக் காட்டுகின்றது. தமிழகத்தில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி சைவ சித்தாந்தச் சாயல் பெற்றிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

   

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • அறபு - பாரசீக நாடுகளில் தோன்றிய இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் சித்தாந்தங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

  • இந்திய - இஸ்லாமிய சமயத் தத்துவங்கள் வேறுபட்டிருப்பினும் ஆன்மிக ஞானப் பயணம் ஒன்றுபட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

  • இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி இந்நாட்டு மெய்ஞ்ஞானச் செல்வங்களைத் தன்வயமாக்கி இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

  • இந்நாட்டு இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர் காட்டிய வேற்றுமையில் ஒற்றுமை, சமய நல்லிணக்கம், சமுதாயத் தொண்டுகளைப் பயின்று படிப்பினையாகக் கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 11:04:41(இந்திய நேரம்)