தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20244 இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

 • பாடம் - 4

  P20244 இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாம் சமயம் ஆற்றியுள்ள தொண்டினைப் பற்றிக் கூறுகிறது.

  இஸ்லாம் சமய அறத்தைப்பற்றியும், அறம் உரைத்த நாயகர்களின் வரலாற்றையும் கூறுகிறது.

  இஸ்லாமியப் புலவர்கள் பாடிய காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் பற்றி விளக்குகிறது.

  இஸ்லாமிற்கு முற்பட்ட சமயங்களான இஸ்ரேலிய, யூத, கிறித்தவ சமய வரலாற்றைத் தெரிவிக்கின்றது.

  இஸ்ரேலிய, யூத, கிறித்தவ, இஸ்லாமிய சமயங்கட்கு மூலப்பிதா ஒருவரே என்பதை உணர்த்துகின்றது.

  இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் படித்தரங்களை விளக்குகின்றது.

   

  இந்தப் பாடத்தைக் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் தொகையும் வகையும் தெரிந்து கொள்ளலாம்.

  • இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் அறபு நாட்டாரின் சமய வாழ்வைப் பாடிய போதிலும் தமிழ் மரபைப் பின் பற்றியிருப்பதைக் காணலாம்.

  • அறபு நாட்டில் பிறந்த நபிகள் பெருமானாருக்குத் தமிழ் மொழியின் மேல் இருந்த விருப்பத்தை அறியலாம்.

  • எந்தச் சமயத்தவர்கள் ஆயினும் இறையருள் பெற இறைநம்பிக்கையே அடிப்படையான காரணம் என்பதனை அறிந்து கொள்ளலாம். அறாபிய - இஸ்ரேலிய நாட்டுச் சமயங்களைப் பற்றிய வரலாற்றை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:03:36(இந்திய நேரம்)