Primary tabs
4.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாம் சமயம் ஆற்றியுள்ள தொண்டு சிறப்புடையது. அறபு நாட்டில் கால்கொண்ட இஸ்லாம் சமய அறத்தையும், அறம் உரைத்த நாயகர்களின் வரலாற்றையும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இலக்கியங்களாகப் படைத்துள்ளனர். காப்பியங்களாகவும் சிற்றிலக்கியங்களாகவும் உரைநடை, நாடகம் மற்றும் மெய்ஞ்ஞான இலக்கியங்களாகவும் படைத்துத் தமிழன்னைக்குத் தன்னிகரற்ற அணிகலனாகச் சூட்டியுள்ளனர். இவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் இவ்வகை இலக்கியங்களை இயற்றியுள்ளனர்.