முகப்பு |
உலோச்சனார் |
11. நெய்தல் |
பெய்யாது வைகிய கோதை போல |
||
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; |
||
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் |
||
வாரார் என்னும் புலவி உட்கொளல் |
||
5 |
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
|
புணரி பொருத பூ மணல் அடைகரை, |
||
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, |
||
வலவன் வள்பு ஆய்ந்து ஊர, |
||
நிலவு விரிந்தன்றால் கானலானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்
|
38. நெய்தல் |
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, |
||
பாட்டம் பொய்யாது பரதவர் பகர, |
||
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் |
||
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு |
||
5 |
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
|
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க் |
||
கழி சூழ் படப்பைக் காண்டவாயில், |
||
ஒலி காவோலை முள் மிடை வேலி, |
||
பெண்ணை இவரும் ஆங்கண் |
||
10 |
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. | உரை |
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்
|
63. நெய்தல் |
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
||
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
||
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
||
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
||
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
||
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
||
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
||
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
||
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|
64. குறிஞ்சி |
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக! |
||
அன்னவாக இனையல்-தோழி!-யாம் |
||
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்? |
||
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் |
||
5 |
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் |
|
வறனுற்று ஆர முருக்கி, பையென |
||
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என் |
||
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென, |
||
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர் |
||
10 |
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது |
|
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம் |
||
காமம் படர் அட வருந்திய |
||
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே! | உரை | |
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! | உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
131. நெய்தல் |
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், |
||
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
||
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப! |
||
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் |
||
5 |
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
|
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், |
||
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், |
||
கள் கமழ், பொறையாறு அன்ன என் |
||
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? | உரை | |
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்
|
149. நெய்தல் |
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, |
||
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, |
||
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, |
||
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, |
||
5 |
அலந்தனென் வாழி-தோழி!-கானல் |
|
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் |
||
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, |
||
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு |
||
செலவு அயர்ந்திசினால், யானே; |
||
10 |
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! | உரை |
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
191. நெய்தல் |
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் |
||
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த |
||
வண்டற் பாவை வன முலை முற்றத்து, |
||
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் |
||
5 |
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
|
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி, |
||
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் |
||
என் நோக்கினளே அன்னை; நாளை |
||
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், |
||
10 |
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
|
நறும் பூங் கானல் வந்து, அவர் |
||
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்
|
203. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு |
||
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங் |
||
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை |
||
5 |
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, |
|
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் |
||
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை |
||
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, |
||
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் |
||
10 |
செய்த தன் தப்பல் அன்றியும், |
|
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்
|
223. நெய்தல் |
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின் |
||
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி, |
||
பகலும் வருதி, பல் பூங் கானல்; |
||
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள் |
||
5 |
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் |
|
எல்லி வம்மோ!-மெல்லம் புலம்ப! |
||
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் |
||
துறையினும் துஞ்சாக் கண்ணர் |
||
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே. | உரை | |
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.-உலோச்சனார்
|
249. நெய்தல் |
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை |
||
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், |
||
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் |
||
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, |
||
5 |
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
|
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, |
||
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் |
||
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், |
||
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, |
||
10 |
அம்பல் மூதூர் அலர் எழ, |
|
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? | உரை | |
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்
|
254. நெய்தல் |
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
||
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
||
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
||
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
||
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
||
அயினி மா இன்று அருந்த, நீலக் |
||
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
||
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
||
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே | உரை | |
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|
278. நெய்தல் |
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, |
||
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, |
||
பொன்னின் அன்ன தாது படு பல் மலர் |
||
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
||
5 |
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
|
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- |
||
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி |
||
குளம்பினும் சேயிறா ஒடுங்கின; |
||
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. | உரை | |
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்
|
287. நெய்தல் |
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த; |
||
நல் எயிலுடையோர் உடையம்' என்னும் |
||
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப் |
||
5 |
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், |
|
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், |
||
காமம் பெருமையின், வந்த ஞான்றை- |
||
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் |
||
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும், |
||
10 |
'தேர் மணித் தெள் இசைகொல்?' என, |
|
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
|
311. நெய்தல் |
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, |
||
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: |
||
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, |
||
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், |
||
5 |
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
|
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, |
||
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
||
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே: |
||
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, |
||
10 |
இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. | உரை | |
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்
|
331. நெய்தல் |
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் |
||
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, |
||
கானல் இட்ட காவற் குப்பை, |
||
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி, |
||
5 |
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, |
|
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என |
||
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் |
||
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப! |
||
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; |
||
10 |
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் |
|
பிறர் பிறர் அறிதல் யாவது- |
||
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்
|
354. நெய்தல் |
தான் அது பொறுத்தல் யாவது-கானல் |
||
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை |
||
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த |
||
கானல் நண்ணிய வார் மணல் முன்றில், |
||
5 |
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை |
|
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த |
||
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், |
||
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு |
||
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் |
||
10 |
அளம் போகு ஆகுலம் கடுப்ப, |
|
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே? | உரை | |
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
363. நெய்தல் |
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் |
||
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என |
||
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம் |
||
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் |
||
5 |
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு |
|
வம்மோ-தோழி!-மலி நீர்ச் சேர்ப்ப- |
||
பைந் தழை சிதைய, கோதை வாட, |
||
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு |
||
சில விளங்கு எல் வளை ஞெகிழ, |
||
10 |
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. | உரை |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத
|
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. | உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|
378. நெய்தல் |
யாமமும் நெடிய கழியும்; காமமும் |
||
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல் |
||
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய, |
||
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்; |
||
5 |
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், |
|
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் |
||
அயல் இற் பெண்டிர் பசலை பாட, |
||
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல் |
||
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, |
||
10 |
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, |
|
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு |
||
நாடாது இயைந்த நண்பினது அளவே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
|