முகப்பு |
மருதம் |
20. மருதம் |
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி, |
||
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் |
||
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் |
||
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, |
||
5 |
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், |
|
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி, |
||
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல் |
||
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; |
||
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை, |
||
10 |
பழம் பிணி வைகிய தோள் இணைக் |
|
குழைந்த கோதை, கொடி முயங்கலளே. | உரை | |
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
30. மருதம் |
கண்டனென்-மகிழ்ந!-கண்டு எவன்செய்கோ?- |
||
பாணன் கையது பண்புடைச் சீறியாழ் |
||
யாணர் வண்டின் இம்மென இமிரும், |
||
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் |
||
5 |
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் |
|
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி- |
||
கால் ஏமுற்ற பைதரு காலை, |
||
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு, |
||
பலர் கொள் பலகை போல- |
||
10 |
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. | உரை |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.-கொற்றனார்
|
40. மருதம் |
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட, |
||
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர், |
||
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார், |
||
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப, |
||
5 |
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் |
|
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச, |
||
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் |
||
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் |
||
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த, |
||
10 |
நள்ளென் கங்குல், கள்வன் போல, |
|
அகன் துறை ஊரனும் வந்தனன்- |
||
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே. | உரை | |
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.-கோண்மா நெடுங்கோட்டனார்
|
50. மருதம் |
அறியாமையின், அன்னை! அஞ்சி, |
||
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் |
||
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல, |
||
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை |
||
5 |
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், |
|
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என, |
||
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர், |
||
'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே- |
||
செறுநரும் விழையும் செம்மலோன் என, |
||
10 |
நறு நுதல் அரிவை! போற்றேன், |
|
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே. | உரை | |
தோழி பாணற்கு வாயில்மறுத்தது.-மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
60. மருதம் |
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் |
||
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! |
||
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், |
||
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு |
||
5 |
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு |
|
கவர் படு கையை கழும மாந்தி, |
||
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின் |
||
நடுநரொடு சேறிஆயின், அவண் |
||
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் |
||
10 |
மா இருங் கூந்தல் மடந்தை |
|
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. | உரை | |
சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது.-தூங்கலோரியார்
|
70. மருதம் |
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! |
||
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன |
||
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! |
||
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, |
||
5 |
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, |
|
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ- |
||
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் |
||
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் |
||
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்
|
80. மருதம் |
'மன்ற எருமை மலர் தலைக் காரான் |
||
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு, |
||
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் |
||
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து, |
||
5 |
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, |
|
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, |
||
தைஇத் திங்கள் தண் கயம் படியும் |
||
பெருந் தோட் குறுமகள் அல்லது, |
||
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. | உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்
|
90. மருதம் |
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், |
||
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா, |
||
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த |
||
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு |
||
5 |
வாடா மாலை துயல்வர, ஓடி, |
|
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் |
||
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், |
||
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, |
||
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் |
||
10 |
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா |
|
நயன் இல் மாக்களொடு கெழீஇ, |
||
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! | உரை | |
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.-அஞ்சில் அஞ்சியார்
|
100. மருதம் |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர் |
||
மாரிக் கொக்கின் கூரல் அன்ன |
||
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் |
||
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் |
||
5 |
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் |
|
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின் |
||
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப் |
||
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் |
||
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் |
||
10 |
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
|
மண் ஆர் கண்ணின் அதிரும், |
||
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. | உரை | |
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்
|
120. மருதம் |
தட மருப்பு எருமை மட நடைக் குழவி |
||
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், |
||
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை |
||
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, |
||
5 |
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
|
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் |
||
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் |
||
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, |
||
அட்டிலோளே அம் மா அரிவை- |
||
10 |
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
|
சிறு முள் எயிறு தோன்ற |
||
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. | உரை | |
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.-மாங்குடி கிழார்
|
150. மருதம் |
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்: |
||
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, |
||
அரண் பல கடந்த முரண் கொள் தானை |
||
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு |
||
5 |
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
|
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக் |
||
கலி மா கடைஇ வந்து, எம் சேரித் |
||
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய |
||
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, |
||
10 |
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
|
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. | உரை | |
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
|
170. மருதம் |
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், |
||
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், |
||
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் |
||
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; |
||
5 |
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
|
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், |
||
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது |
||
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் | ||
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? | உரை | |
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
|
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|
200. மருதம் |
கண்ணி கட்டிய கதிர அன்ன |
||
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
||
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ! |
||
5 |
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- |
|
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் |
||
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, |
||
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன் |
||
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, |
||
10 |
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் |
|
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே. | உரை | |
தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்
|
210. மருதம் |
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் |
||
மறு கால் உழுத ஈரச் செறுவின், |
||
வித்தொடு சென்ற வட்டி பற்பல |
||
மீனொடு பெயரும் யாணர் ஊர! |
||
5 |
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் |
|
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே; |
||
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் |
||
புன்கண் அஞ்சும் பண்பின் |
||
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே. | உரை | |
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்
|
216. மருதம் |
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும், |
||
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்; |
||
கண்ணுறு விழுமம் கை போல் உதவி, |
||
நம் உறு துயரம் களையார்ஆயினும், |
||
5 |
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; |
|
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் |
||
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண், |
||
ஏதிலாளன் கவலை கவற்ற, |
||
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் |
||
10 |
கேட்டோர் அனையராயினும், |
|
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
230. மருதம் |
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை, |
||
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை, |
||
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும் |
||
5 |
கயற்கணம் கலித்த பொய்கை ஊர! |
|
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்; |
||
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க, |
||
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென |
||
மலி புனல் பரத்தந்தாஅங்கு, |
||
10 |
இனிதே தெய்ய, நின் காணுங்காலே. | உரை |
தோழி வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
250. மருதம் |
நகுகம் வாராய்-பாண!-பகுவாய் |
||
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் |
||
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன் |
||
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு |
||
5 |
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் |
|
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக, |
||
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் |
||
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து, |
||
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, |
||
10 |
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! | உரை |
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
260. மருதம் |
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
||
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
||
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
||
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
||
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
||
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
||
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
||
முகை அவிழ் கோதை வாட்டிய |
||
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! | உரை |
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|
280. மருதம் |
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின் |
||
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் |
||
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் |
||
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை |
||
5 |
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்- |
|
பழன யாமைப் பாசடைப் புறத்து, |
||
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், |
||
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என் |
||
நல் மனை நனி விருந்து அயரும் |
||
10 |
கைதூவு இன்மையின் எய்தாமாறே. | உரை |
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்
|
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. | உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
300. மருதம் |
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
||
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
||
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
||
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
||
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
||
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
||
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
||
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
||
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
||
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. | உரை | |
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
310. மருதம் |
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
||
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
||
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
||
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
||
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
||
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
||
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
||
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? | உரை | |
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|
320. மருதம் |
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; |
||
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- |
||
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், |
||
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் |
||
5 |
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
|
காரி புக்க நேரார் புலம்போல், |
||
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, |
||
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி |
||
எழில் மா மேனி மகளிர் |
||
10 |
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. | உரை |
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்
|
330. மருதம் |
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
||
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
||
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
||
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை |
||
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
||
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
||
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
||
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
||
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
340. மருதம் |
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! | உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
350. மருதம் |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
||
பழனப் பல் புள் இரிய, கழனி |
||
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் |
||
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் |
||
5 |
தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
|
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் |
||
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை |
||
சாடிய சாந்தினை; வாடிய கோதையை; |
||
ஆசு இல் கலம் தழீஇயற்று; |
||
10 |
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! | உரை |
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.-பரணர்
|
360. மருதம் |
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய |
||
விழவு ஒழி களத்த பாவை போல, |
||
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி, |
||
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், |
||
5 |
சென்றீ-பெரும!-சிறக்க, நின் பரத்தை! |
|
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே |
||
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, |
||
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும் |
||
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது |
||
10 |
உற்ற நின் விழுமம் உவப்பென்; |
|
மற்றும் கூடும், மனை மடி துயிலே. | உரை | |
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
370. மருதம் |
வாராய், பாண! நகுகம்-நேரிழை |
||
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி, |
||
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் |
||
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி, |
||
5 |
'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் |
|
திதலை அல்குல் முது பெண்டு ஆகி, |
||
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என, |
||
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி, |
||
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல, |
||
10 |
முகை நாண் முறுவல் தோற்றி, |
|
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே. | உரை | |
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்.- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
|
380. மருதம் |
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு |
||
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், |
||
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, |
||
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; |
||
5 |
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
|
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் |
||
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் |
||
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; |
||
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை, |
||
10 |
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
|
புரவியும் பூண் நிலை முனிகுவ; |
||
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்
|
390. மருதம் |
வாளை வாளின் பிறழ, நாளும் |
||
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் |
||
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த |
||
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை |
||
5 |
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, |
|
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ; |
||
யாணர் ஊரன் காணுநன்ஆயின், |
||
வரையாமைஓ அரிதே; வரையின், |
||
வரைபோல் யானை, வாய்மொழி முடியன் |
||
10 |
வரை வேய் புரையும் நல் தோள் |
|
அளிய-தோழி!-தொலையுந பலவே. | உரை | |
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. | உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|