முகப்பு |
முல்லை |
21. முல்லை |
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு, |
||
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் |
||
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் |
||
கானம், 'கார்' எனக் கூறினும், |
||
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. | உரை | |
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு |
24. முல்லை |
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர் |
||
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? |
||
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து |
||
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் |
||
குழைய, கொடியோர் நாவே, |
||
காதலர் அகல, கல்லென்றவ்வே. | உரை | |
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர் |
64. முல்லை |
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, |
||
புன் தலை மன்றம் நோக்கி, மாலை |
||
மடக் கண் குழவி அலம்வந்தன்ன |
||
நோயேம் ஆகுதல் அறிந்தும், |
||
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே. | உரை | |
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை |
65. முல்லை |
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன் |
||
இன்புறு துணையொடு மறுவந்து உகள, |
||
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்- |
||
வாராது உறையுநர் வரல் நசைஇ |
||
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார் |
66. முல்லை |
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- |
||
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய |
||
பருவம் வாராஅளவை, நெரிதரக் |
||
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, |
||
வம்ப மாரியைக் கார் என மதித்தே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார் |
98. முல்லை |
'இன்னள் ஆயினள் நன்னுதல்' என்று, அவர்த் |
||
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே, |
||
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை |
||
நீர் வார் பைம் புதற் கலித்த |
||
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோக்குளமுற்றன் |
99. முல்லை |
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, |
||
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து, |
||
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே? |
||
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை |
||
இறைத்து உணச் சென்று அற்றாங்கு, |
||
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே. | உரை | |
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார் |
108. முல்லை |
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் |
||
கறவை கன்றுவயின் படர, புறவில் |
||
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் |
||
செவ் வான் செவ்வி கொண்டன்று; |
||
உய்யேன் போல்வல்-தோழி!-யானே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன் |
110. முல்லை |
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு |
||
யார் ஆகியரோ-தோழி!-நீர |
||
நீலப் பைம் போது உளரி, புதல |
||
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி, |
||
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த |
||
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று |
||
இன்னாது எறிதரும் வாடையொடு |
||
என் ஆயினள்கொல் என்னாதோரே? | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார் |
126. முல்லை |
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் |
||
இவணும் வாரார்; எவணரோ?' என, |
||
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் |
||
தொகு முகை இலங்கு எயிறு ஆக |
||
நகுமே-தோழி!-நறுந் தண் காரே. | உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி |
148. முல்லை |
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த |
||
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் |
||
காசின் அன்ன போது ஈன் கொன்றை |
||
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும், |
||
'கார் அன்று' என்றிஆயின், |
||
கனவோ மற்று இது? வினவுவல் யானே. | உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார். |
162. முல்லை |
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் |
||
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- |
||
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் |
||
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; |
||
நகுவை போலக் காட்டல் |
||
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? | உரை | |
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன். |
167. முல்லை |
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், |
||
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, |
||
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் |
||
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் |
||
'இனிது' எனக் கணவன் உண்டலின், |
||
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. | உரை | |
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. | உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
186. முல்லை |
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த |
||
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி |
||
எயிறு என முகையும் நாடற்குத் |
||
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே, | உரை | |
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி. |
188. முல்லை |
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு |
||
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்- |
||
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்- |
||
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
190. முல்லை |
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
||
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர் |
||
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி |
||
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய |
||
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், |
||
நல் ஏறு இயங்குதொறு இயம்பும் |
||
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன். |
191. முல்லை |
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?- |
||
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம் |
||
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத் |
||
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய |
||
ஏதிலாளர் இவண் வரின், 'போதின் |
||
பொம்மல் ஓதியும் புனையல்; |
||
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
193. முல்லை |
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன |
||
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, |
||
தட்டைப் பறையின், கறங்கும் நாடன் |
||
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் |
||
மணந்தனன்மன் எம் தோளே; |
||
இன்றும், முல்லை முகை நாறும்மே. | உரை | |
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார் |
194. முல்லை |
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர |
||
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் |
||
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; |
||
ஏதில கலந்த இரண்டற்கு என் |
||
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? | உரை |
|
பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார். |
200. நெய்தல் |
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் |
||
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து, |
||
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!- |
||
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே- |
||
கால மாரி மாலை மா மலை |
||
இன் இசை உருமினம் முரலும் |
||
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே. | உரை | |
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார். |
210. முல்லை |
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் |
||
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி |
||
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு |
||
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி |
||
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு |
||
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. | உரை | |
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. | உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
221. முல்லை |
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன; |
||
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, |
||
பாலொடு வந்து கூழொடு பெயரும் |
||
ஆடுடை இடைமகன் சென்னிச் |
||
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. | உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன் |
233. முல்லை |
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி |
||
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் |
||
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன |
||
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு |
||
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் |
||
வரைகோள் அறியாச் சொன்றி, |
||
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே. | உரை | |
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன் |
234. முல்லை |
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
||
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
||
மாலை என்மனார், மயங்கியோரே: |
||
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
||
பெரும் புலர் விடியலும் மாலை; |
||
பகலும் மாலை-துணை இலோர்க்கே. | உரை | |
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
240. முல்லை |
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
||
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
||
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
||
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
||
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
||
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
||
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி. |
242. முல்லை |
கானங்கோழிக் கவர் குரற் சேவல் |
||
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் |
||
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் |
||
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர் |
||
வேந்து விடு தொழிலொடு செலினும், |
||
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே. | உரை | |
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன் |
251. முல்லை |
மடவ வாழி-மஞ்ஞை மா இனம் |
||
கால மாரி பெய்தென, அதன் எதிர் |
||
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; |
||
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே! |
||
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், |
||
புது நீர் கொளீஇய, உகுத்தரும் |
||
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே. | உரை | |
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன். |
270. முல்லை |
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென |
||
வீழ் உறை இனிய சிதறி, ஊழின் |
||
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் |
||
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே, |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
இவளின் மேவினம் ஆகி, குவளைக் |
||
குறுந் தாள் நாள்மலர் நாறும் |
||
நறு மென் கூந்தல் மெல் அணையேமே. | உரை | |
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான். |
275. முல்லை |
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
||
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
||
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
||
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
||
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
||
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. | உரை | |
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |
279. முல்லை |
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
||
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
||
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
||
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
||
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
||
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
||
இரும் பல் குன்றம் போகி, |
||
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? | உரை | |
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
287. முல்லை |
அம்ம வாழி-தோழி-காதலர் |
||
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ- |
||
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ |
||
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் |
||
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, |
||
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி, |
||
செழும் பல் குன்றம் நோக்கி, |
||
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே? | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, 'நம்மைத் துறந்து வாரார்' என்று கவன்றாட்கு,பருவங் காட்டி, தோழி, 'வருவர்' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார். |
289. முல்லை |
வளர்பிறை போல வழிவழிப் பெருகி, |
||
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு |
||
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய், |
||
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும், |
||
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே; |
||
பட்ட மாரி படாஅக்கண்ணும், |
||
அவர் திறத்து இரங்கும் நம்மினும், |
||
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
'காலம் கண்டு வேறுபட்டாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், 'கொடியர்' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்'என்று, தலைமகள் சொல்லியது |
314. முல்லை |
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் |
||
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, |
||
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும், |
||
வாரார் வாழி!-தோழி!-வரூஉம் |
||
இன் உறல் இள முலை ஞெமுங்க- |
||
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே. | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன் |
319. முல்லை |
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து, |
||
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், |
||
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, |
||
மை அணி மருங்கின் மலையகம் சேரவும், |
||
மாலை வந்தன்று, மாரி மா மழை; |
||
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் |
||
இன்னும் வாரார்ஆயின், |
||
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே | உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன் |
323. முல்லை |
எல்லாம் எவனோ? பதடி வைகல்- |
||
பாணர் படுமலை பண்ணிய எழாலின் |
||
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, |
||
பெய்த புலத்துப் பூத்த முல்லைப் |
||
பசு முகைத் தாது நாறும் நறு நுதல் |
||
அரிவை தோள்-அணைத் துஞ்சிக் |
||
கழிந்த நாள் இவண் வாழும் நாளே, | உரை | |
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார் |
344. முல்லை |
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் |
||
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் |
||
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு |
||
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் |
||
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, |
||
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் |
||
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன் |
358. மருதம் |
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
||
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் |
||
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
||
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்: |
||
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
||
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
||
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. | உரை | |
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |
382. முல்லை |
தண் துளிக்கு ஏற்ற பைங் |
||
கொடி முல்லை |
||
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப் |
||
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல, |
||
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று, |
||
கார் இது பருவம் ஆயின், |
||
வாராரோ, நம் காதலோரே? | உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன் |
387. முல்லை |
எல்லை கழிய, முல்லை மலர, |
||
கதிர் சினம் தணிந்த கையறு மாலை, |
||
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின், |
||
எவன்கொல் வாழி?-தோழி!- |
||
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார் |
391. முல்லை |
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் |
||
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், |
||
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, |
||
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; |
||
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் |
||
கையற வந்த பையுள் மாலை, |
||
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை |
||
தாஅம்நீர் நனந்தலை புலம்பக் |
||
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! | உரை | |
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார் |
400. முல்லை |
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, |
||
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று, |
||
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, |
||
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப் |
||
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! |
||
இன்று தந்தனை தேரோ- |
||
நோய் உழந்து உறைவியை நல்கலானே? | உரை | |
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார் |