தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.4 தொகுப்புரை

    இப்பாடப் பகுதியில் காப்பியம் என்ற இலக்கிய வகை மேலைநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று பார்த்தோம். தமிழ்க் காப்பிய வகைகளையும், பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என்ற வகைப்பாடுகளையும் கண்டோம். பெருங்காப்பிய, சிறுகாப்பிய இலக்கணமும் இங்கு விளக்கப் பெற்றுள்ளது. காப்பியம் என்ற சொல்லின் பொருள் பற்றியும் அறிந்தோம். இவ்வகையான குறிப்புகள் மூலம் காப்பியம் என்றால் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

    மாணவ நண்பர்களே! இப்பாடத்தைப் பயின்று இது போன்ற இலக்கிய வகை பற்றிய கருத்துகளை மேலும் பல நூல்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, காப்பியம் என்ற இலக்கிய வகை பற்றிய அறிமுகமே இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான ஆழ்ந்த படிப்புக்கு இது ஒரு முன்னோடி எனக் கொண்டு மேலும் மேலும் காப்பிய இலக்கிய வகை பற்றிய கல்வியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1

    தமிழில் பெருங்காப்பியங்களாக எண்ணத் தக்கவை எவை?

    2

    தமிழ்ச் சிறுகாப்பியங்கள் யாவை?

    3

    பெருங்காப்பிய வருணனைக் கூறுகள் எவை?

    4

    பெருங்காப்பியப் பொது நிகழ்ச்சிக் கூறுகளாக எவை எவை எடுத்துரைக்கப்படுகின்றன?

    5

    பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-10-2017 18:19:11(இந்திய நேரம்)